Erhältlich:
Nicht auf Lager
Buch (Softcover): Fachbuch
Jaathi Olippum Mozhi Prachinaiyum
Verlag:
Nilan Publishers Unsere-Artikel-Nr.: P35293579
EAN: 9788168904149
Erhältlich:
Nicht auf Lager
Zustellung: Do, 08.10.2026
Versand: Kostenlos
CHF 23.20
Beschreibung
திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம். கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி - ஆங்கிலம் - தமிழ் ஆகியவற்றின் இருப்பிடம் ஆகியவைப் பற்றி இதில் நன்கு விளக்குகிறார். வால்டர் லிப்மன் யார் என்பது ''ஹிந்து' பத்திரிகை படிப்பவர்களுக்குத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகா உலகிலே தலை சிறந்த அரசியல் விமர்சகர்களில் அவரும் ஒருவர். அவரது கட்டுரைகளை ஹிந்து பத்திரிகையில் படித்தவர்கள் அநேகர் இங்கு இருப்பார்கள். வால்டர் லிப்மனை மென்னஸோடா என்ற அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பேச அழைத்தார்கள். 'மயக்கத்தின் மரணம்' என்ற தலைப்பில் அவர் பேசினார். அவர் பேச்சில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். அவர் கூறியதை அப்படியே சொல்லுகிறேன், கேளுங்கள். " எகிப்து நாட்டில் தாலமி என்ற வான நூல் வல்லுனர் இருந்தார். அவர், பூமி பிரபஞ்சத்தின் மையமாக இயங்குகிறது என்றார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த இதாலிய வான நூல் வல்லுனரான கோப்பர் நிகஸ் என்பார், பூமி சூரிய மண்டலத் தில் ஒரு கிரகம் மாத்திரமே" என்று கூறினார். இந்த மாறுதலைப் போல், சிறிது காலத்துக்கு முன் வரையில் அரசியல் பிரபஞ்சத்தின் மையமாக விளங்கிய மேலைநாடுகள், இன்று விரிவடைந்துள்ள சூரியமண்டலத்தில் ஒரு கிரகமாகிவிட்டது. அமெரிக்காவும் அவற்றில் ஒரு கிரகம், வேண்டுமானால் பெரிய கிரகம் என்று கூறலாம். அவ்வளவு தான்'' என்றார் லிப்மன்.
Spezifikationen
Sprache
- Tamil
Autor
- P. Jeevanandham
Erscheinungsjahr
- 2026
Format
- Buch (Softcover)
Anzahl Seiten
- 60